சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

Must read

 
சென்னை:
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் முதன் முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
அடுத்த பொதுச் செயலாளர் யார்? என்பதை தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான கட்டத்தில் அதிமுக தற்போது உள்ளது. பதவியில் இருப்பவர்கள் சசிகலா தான் அடுத்த பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், அடித்தட்டு தொண்டன் மத்தியிலும், ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை.
 

இது தவிர ஒரு புறம் சசிகலா புஷ்பா எம்.பி., ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என போட்டியும் வலுத்து வருகிறது. இந்த வகையில் தற்போது நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் 29ம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article