போடி:சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம், துணை முதலமைச்சரின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மற்றும் வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி. ரவீந்திர நாத்தும் வந்தார்.
மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்த பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னர் ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[youtube-feed feed=1]