சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை சந்திக்கிறார்.

வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரமும் வேகம் எடுத்துள்ளது,

தேர்தல் களத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேமுதிக அமமுகவுடன் இணைந்து தேர்தல் களத்தை காண்கிறது. நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை சந்திக்கிறார். நாளை காலை 11 மணி அளவில் சென்னை கோயம்பேடு தலைமை கழகத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.