சென்னை; தமிழ்நாட்டில்  ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில், அவர்களின் சொந்த பணிக்கு காவல்துறையைச் சேர்ந்த பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஆடர்லி முறை என்று கூறப்படுகிறது. இதை தடுக்க உத்தரவிட கோரி பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  சென்னை, ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்த நீதிபதி அதிருப்தி அடைந்தார்.  தமிழ்நாட்டில், ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் காட்டமாக விமர்சித்தார்.

ஆடர்லி பயன்படுத்தும் காவல்துறை உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆடர்லிகள் விவகாரத்தில் முதல்-அமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை தேவை என்றும் கூறினார்.  இதையடுத்து,  டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன்,  உயரதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் அலுவலக உதவியாளர் அல்லது இருப்பிட உதவியாளர் போன்ற பணியை உருவாக்கலாம் என அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்ந்துள்ளனர். அதுபோல, புதிய பணிகளை உருவாக்க தமிழக அரசுக்கு, டிஜிபி பரிந்துரை வைக்கலாம் என்றும் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், எந்த பணிக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி அரசமைப்பு சட்ட உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றும் ஆடர்லிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தால் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.