டில்லி

தானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது.

அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும்.  தற்போது அதானி குழுமம், ஊடக துறையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே அதானி குழுமம் ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறது.

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்.டி.டிவியின் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை iந்த நிறுவனம் வாங்கியது. பிறகு  டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பி.க்யூ. பிரைம் என்ற வணிகம் மற்றும் நிதி தொடர்பான செய்தி சேனலை குயின்டில்லியன் மீடியாவிடம் இருந்து வாங்கியது.

டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தின் வருமானம் 2022-23 நிதியாண்டில் 11.86 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க் லிமிடெட் வாங்கியுள்ளது. இதனால் ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.