டெல்லி:
ஆஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் இந்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் சிக்கியுள்ளது. நிதி முறைகேடு, ஊழல் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கப்பல் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்து இந்திய நுகர்வோரின் மின்சார கட்டணத்தை செயற்கையாக உயர்த்தியதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் நிலக்கரி சுரங்கத்தின் தாய் நிறுவனமாக உள்ள அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமும் விசாரணை பட்டியலில் உள்ளது. பண மோசடி, நிலக்கரி இறக்குமதியில் போலி மூலதன விலை முறைகேடு என இரண்டு பிரிவாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிதி மோசடி குற்றச்சாட்டை இந்தியாவின் முதன்மை விசாரணை அமைப்பு விசாரித்து வருகிறது என்று சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சய்கின் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்த இறக்குமதியாளர்கள் செயற்கை பற்றாகுறையை ஏற்படுத்தி, உரிய விலையை விட பல மடங்கு உயர செய்துள்ளனர் என்று வருவாய் புலனாய்வு கண்டறிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதானி குழுமத்தில் உள்ள 5 மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த புலனாய்வில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத இரும்பு தாது பொருட்கள் தொழில் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது போன்ற முறைகேட்டிலும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்து வந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தையும், அதற்கான ரயில் பாதையையுமு இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.
அதனால் விரைவில் அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியுடன் அதானி குழும தலைவர் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் நடவடிக்கை என்பது ஒரு கண் துடைப்பாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.