டெல்லி:
நோயாளி என்ற போர்வையில் முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு 527 நாட்கள் அடைக்கலம் கொடுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய லோக்தள் கட்சியை சேர்ந்தவர் பால்பிர் சிங் அகா பால பஹல்வன். முன்னாள் எம்எல்ஏ.வான இவர் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். ஜாமீனில் வெளியே இருந்தார். வழக்கின் சாட்சிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து இவரது ஜாமீனை ரத்து செய்து சம்மந்த்தப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உடனடியாக அவர் சரண்டராக கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி உத்தரவட்டது.
 

இதையடுத்து இவர் தாமாக சென்று ஹரியானா மாநிலம குருக்ராம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். தற்போது வரை 537 நாட்களாக அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றமும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனாலும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகாமல் இருப்பதால் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த தகவல் தற்போது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நீதிபதிகள் தாகூர், பானுமதி, லலித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. நீதிமன்ற உத்தரவை மதித்து சரண்டர் ஆகாமல் பல்பீர் இருப்பது நீதியை மதிக்காத செயலாகும். நோயாளி என்ற போர்வையில் மருத்துவமனை நிர்வாகம் குற்றவாளிகளுக்கு துணை போவது கண்டனத்திற்குறிது. இதற்காக மருத்துவமனை மீது சட்டப்பூர் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். அதனால் இது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சச்தேவ், மருத்துவமனை இயக்குனர் முனிஸ் பிரபாகர் ஆகியோர் ஜனவரி 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் சிக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், பணம் படைத்தவர்கள் கைது ஆவதை தவிர்க்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் வகையில் நோயாளிகள் என்ற போர்வையில் போலியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து கொள்வது தொடர்கதையாக வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகி ஒரு சில நாட்களிலேயே தமிழக தலைமை செயலாளராக இருந்து வருமான வரி துறையில் சோதனையில் சிக்கிய ராமமோகனராவ் தற்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.