டெல்லி:
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோர் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் அவர்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும். இதற்கான சுற்றறிக்கையை குழந்தை உரிமை அமைப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.
வேட்பாளராக போட்டியிடும் நபர் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் தினமும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி வருகை பதிவேடு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும மக்கள் பிரதிநிதிகள் இந்த சமூகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று ஆணையத்தில் உறுப்பினர் பிரியங் கனூன் தெரிவித்துள்ளார்.