‘சீமானை கைது செய்ய வேண்டும்’ – வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி….!

Must read

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை கொடுத்தப் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதேபோல், தன்னுடைய புகாரின் பேரில் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலெட்சுமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும்” என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீப காலமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி, சிவசங்கர் பாபா முதல் மாஜி அமைச்சர் மணிகண்டன் வரை கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.. இதுதான் பெண்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.. அந்த வகையில் நடிகை விஜயலட்சுமிக்கும், புது நம்பிக்கை பிறந்துள்ளது.. தன்னுடைய பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற முனைப்பில், திமுக அரசின் கதவை தட்டி உள்ளார்.

More articles

Latest article