நடிகர் தற்கொலை வழக்கில் போலீஸை நம்ப முடியாது: நடிகை தனுஸ்ரீ தத்தா தாக்கு.. ’என் வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கியவர்கள்’

Must read

தமிழில், ’தீராத விளையாடு பிள்ளை’ என்ற ஒரு படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் இந்தி வில்லன் நடிகர் நானா படேகர் மீது மீடு புகார் அளித்தார். நானா படேகர் தமிழில் பொம்மலாட்டம் காலா பொன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஸ்ரீ, நானா படேகர் மீது அளித்த வழக்கு சாட்சிகள் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் தற்போது நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் கருத்து தெரிவித்தி ருக்கிறார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியாதாவது:


சுஷாந்த் மரண வழக்கில் மும்பை காவல்துறை நியாயமாக, எந்த சார்பும் இல்லாமல் விசாரிப் பார்கள் என்பதை என்னால் நம்பமுடியாது. மும்பை போலீஸார் குற்றவாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயல்படுகி றார்கள்.
நானா படேகர் மீது மீடு புகார் அளித்தேன். அதற் காக போதுமான சான்றுகள், நேரடி சாட்சியங்கள், வீடியோ காட்சிகள், சூழ்நிலை சான்றுகள் அளித்தி ருந்தேன் ஆனால் போதுமான சாட்சிகள் இல்லை என்று அந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார்கள். எனக்கு நடிகர் தரப்பிலிருந்து மிரட்டல் வந்தது. நான் மும்பையை விட்டு சென்ற தால் தப்பித்தேன் இல்லாவிட்டால் என்னவாகி இருப்பேன் என்று தெரியாது. நடிகர் சுஷாந்தும் இதுபோன்ற சூழலை உணர்ந்துவேறு எங்காவது சென்றிருந்தால் தப்பி இருப்பார்.
இவ்வாறு தனுஸ்ரீ தத்தா பரபரப்பாக கூறி உள்ளார்.

More articles

Latest article