சென்னை: நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார்.

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் டிவீட் செய்தது பல்வேறு விமர்சனங்களை  ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா குழந்தை பெற தகுதியற்றவரா, அவர் டிரான்ஸ்ஜென்டரா என பலவாறு  சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் விதிமுறைகளின் படி குழந்தைகளை பெற்றார்களா? வாடகை தாய் மூலம் விதிமுறைகளின் படிதான் குழந்தை பெற்றார்களா என சுகாதாரத்துறை மூலம்  விளக்கம் கேட்கப்படும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருமுட்டையை 21 முதல் 35 வயதுடையவர்கள் வழங்கலாம்என்றும் தெரிவித்தார்.

நடிகை நயன்தாரா சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். ஏற்கனவே நடிகர் சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலருடன் தொடர்பில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் விக்னேஷ் சிவனை மணமுடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சரத்குமார் ஜோடியாக ‘ஐயா’ படத்தில் ஹீயோயினாக அறிமுகமான நயன்தாரா, இன்று தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் நயன். இதனையடுத்து ஹனிமூன் கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்தனர். இந்த பரபரப்பான சூழலில்தான்,  கடந்த ஜூன் 9ம் தேதி நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் போட்டுள்ள டிவிட்டர் பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பதிவில், “நானும் நயனும் அம்மா அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும், “எங்கள் பிரார்த்தனைகள் முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளை பரிசாகக் கொடுத்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உயிர் மற்றும் உலகம்” என க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நான்கே மாதங்களில் குழந்தை பிறந்துள்ளது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.

[youtube-feed feed=1]