ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா அளித்த ஆச்சரியமான பதில்.. படம் ஏற்க மறுத்த விவகாரம்..

Must read

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவிட் டிருந்தார். அதில், ‘இந்தி படம் ஒன்றை ஏற்க மறுத்தேம். நடிகை கங்கனா அதில் நடிக்க இருந்தத்தால் அது எனக்கு அசவுகரியமாக இருந்தது. இதனை சொன்னபோது அவர்கள் புரிந்து கொண் டார்கள். மனதில் எது சரியெனபடு கிறதோ அதுவே முக்கியம். அப்படக் குழு வுக்கு எனது வாழ்த்துகள்’

பிசி ஸ்ரீராமின் டிவிட்டிற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத். அதில், ‘உங்களைப் போன்ற லெஜெண்டுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்காமல்போனது எனக்கு பெரிய இழப்பு. என்னால் உங்களுக்கு என்ன அசவுகரிய மான நிலை என்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சரியான முடிவு எடுத்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ எனக் கூறி உள்ளார்.
எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்கும் கங்கனா பிசி ஸ்ரீராமின் டிவிட்டுக்கு கங்கனா இப்படி அமைதியாக பதில் அளித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article