சென்னை: தஞ்சாவூர் பிரதீசுவரர் கோவில் குறித்து பேசியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஜோதிகா, தற்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதிஉதவி அளித்து உள்ளார்.
நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு எதிர்புறத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனையின் சுத்தம், சுகாதாரம் தோற்றம், மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்தவர், அதன் காரணமாகவே தனது கருத்தை தெரிவித்ததா ககூறினார்.
இந்த நிலையில், தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மிகவும் பழமையான அரசு மருத்துவ மனைகளுள் ஒன்று தஞ்சாவூர் ராஜ மிராசுதார் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கியுள்ளார்,
மேலும் மருத்துவமனை வளாகம், விளையாட்டு பூங்கா உள்பட அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, அகரம் பவுண்டேசன் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜோதிகாவின் இந்த நற்செயலை பாராட்டி பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றார்கள்.