மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை! கு.க.செல்வம்

Must read

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி  தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், திமுக  தலைமையின் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார்.
திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில், ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ குகசெல்வம், கடந்த வாரம் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செய்தியளார்களிடம் பேசிய கு.க.செல்வம், தான் பாஜகவில் இணையவில்லை என்றும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் இரண்டு லிஃப்ட் அமைப்ப தற்காகவே பியூஷ் கோயலை சந்தித்ததாக கூறினார்.
இந்த நிலையில், கழக கட்டுப்பாட்டை மீறியதாகவும், கழகத்தக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் கூறி   ‘கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது’ என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும்,  கு.க.செல்வம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், திமுக  தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படு வதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
திமுக தலைமையின் நோட்டீஸ்க்கு எம்எல்ஏ கு.க.செல்வம் பதில் அளித்துள்ளார். அதில், தன்னை தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நிதிக்கு விரோதமானது. தான்  கட்சி மாண்பை மீற வில்லை என்று விளக்கம் அளித்தவர், ‘ மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை, அதனால் தன்னுடைய தற்காலிக நீக்கத்தை திரும்பப் பெறுமாறு கூறியிருக்கிறார். பாஜகவை சேர்ந்த பிரதமர் நேரில் வந்து கருணாநிதியைச் சந்தித்து அனைவருக்கும் தெரியும், அதனால் கட்சி மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியானதல்ல  என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

More articles

Latest article