கறுப்பு வெள்ளை படம் பகிர்ந்த விஜய் ஆண்டனி பட நடிகை ஆஷிமா நார்வால் ..

Must read

பெண்ணை ஆதரிக்கும் பெண் ஹேஷ் டேகில் இணைந்தார்..
பெண்ணை ஆதரிக்கும் பெண் (#Woman SupportingWoman) என்ற ஹேஷ்டாக்குடன் இணைய தளத்தில் வரவி வருகிறது அதில் க்றுப்பு வெள்ளை படத்தை பகிர்ந்து இணைந்தார் ஆஷிமா நார்வால்


இவர் விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததுள்ளார். தற்போது ஆரவ் நடித்திருக்கும் ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்
ஒரு பெண் தனது கறுப்பு வெள்ளைப் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, வேறு சில பெண் களையும் அதுபோல் வெளியிடத் தூண்டி சவால் விடுவார். ஏராளமான பெண்கள் இந்த ஹேஷ் டேக்கில் தங்கள் படங்களை வெளியிட்டு ஆதரவு தருவதற்காகவும், பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் (#WomanSupportingWoman) ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து நிரப்பி வருகின்றன.
கறுப்பு வெள்ளை படத்தி வெளியிட்ட நடிகை ஆஷிமா நார்வால், தனது படத்துடன் மெசேஜும் வெளியிட்டிருக்கிறார்.
இது ஆஷிமா நார்வால் தெரிவித்தாவது:
நேர் மறை நோக்கத்துடன் நல்ல செயல்கள் செய்ப வர்கள், நேர்மையாக இருப்பவர்கள், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள், நிஜ வாழ்க் கையில் நடிக்காதவர்கள் என்றிருக்கும் அனைவரையும் ஆண்-பெண் பால் பாகுபாடு பார்க்காமல் நான் ஆதரிக்கிறேன். பெண் பெண்ணுக்கு ஆதரவு காட்டுகிறாளா அல்லது ஆண் ஆணுக்கு ஆதரவு காட்டுகிறானா என்பதல்ல விஷயம். நல்லவர் களுக்கு நல்லவர்கள் ஆதரவு காட்ட வேண்டும் என்பதே முக்கியம். பல ஆண்கள் எனக்கு ஆதரவு காட்டியதால்தான் ஆசிர்வாதமான வாழ்க்கை எனக்கு அமைந்தது. ஆணோ அல்லது பெண்ணோ அது முக்கியமல்ல. எந்த பாலினத்தவர் என்றாலும், அவரது நோக்கம் மட்டுமே கணக்கில் கொள்ளப்ப டும். எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண் பெண் அனைவருக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படத்தை சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு ஆஷிமா நார்வால் கூறினார்.

 

More articles

Latest article