நான் இன்னும் அவரை காதலிக்கிறேன் – அமலாபால் விளக்கம்

Must read

photo
அமலாபால்

இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்த பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் வதந்திகளாக‌ பரவி வந்தது. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அமலா பால் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது :-
இளம் வயதில் திருமணம் செய்து தவறு இழைத்துவிட்டேன், திருமண தோல்வியால் நான் உடைந்துபோகவில்லை, அதிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வருகிறேன். மற்றவர்களுக்கு நான் ஒரு உதாரனமாகிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். மேலும் இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன். எப்போதும் அந்த காதல் இருக்கும். அவர் எப்போதும் எனக்கு தனிச்சிறந்த மனிதர். அதேநேரம், பிரிவதும் காதல் தான். யாரும் பிரிவதற்காகத் திருமணம் செய்யமாட்டார்கள் என்று அமலா பால் கூறியுள்ளார்.

More articles

Latest article