சென்னை:
டிகர் நாசர் தலைமையில் இன்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே. பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.

கடந்த 2019 ஜூன் 23ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் முடிவுகள் கடந்த மார்ச் 20ல் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சங்க தலைவராக நாசர் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் நாசர் தலைமையில் இன்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.