8 மாநில நடிகர்கள் பங்கு பெரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (‘Celebrity Cricket League’ – CCL) நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 18 ம் தேதி துவங்க இருக்கிறது.

ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி குஞ்சாக்கோ போபன் தலைமையிலும்,

சுதீப் கேப்டனாக உள்ள கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, சல்மான்கானை பிராண்ட் அம்பாசிடராக கொண்ட ரித்தேஷ் தேஷ்முக் தலைமையிலான மும்பை ஹீரோஸ் ஆகிய அணிகள்

தவிர, மனோஜ் திவாரி தலைமையிலான போஜ்புரி தபாங்ஸ், கேப்டனாக உள்ள போனி கபூர் உரிமையாளராக உள்ள ஜிசுசென் குப்தா தலைமையிலான பெங்கால் டைகர்ஸ் மற்றும் சோனு சூட் தலைமையிலான பஞ்சாப் தி ஷேர் ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன.

சென்னை அணியில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெற இருக்கும் 19 ஆட்டங்களின் முடிவில் வெல்லும் அணி சிசிஎல் கோப்பையை பெறும்.

120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ள இந்த ‘Celebrity Cricket League’ (CCL) விளையாட்டுப் போட்டி முந்தைய தொடர்களைக் காட்டிலும் பான் இந்திய அளவில் அதிக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.