தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய அவர் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

சேலம் பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் வாசலில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் மு. கருணாநிதி தனது ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையை சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கினார்.

மாடர்ன் தியேட்டர் – நிறுவனர் டி.ஆர். சுந்தரம்

அதன் நினைவாக சேலம் வரும்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர் வழியாக தனது பயணத்தை மேற்கொள்ளும் கருணாநிதி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.