தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்க வில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே சமயம், தேர்தல் நிறுத்திய சங்கங்களின் பதிவாளர் உத்தரவை எதிர்த்து விஷாலும், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், புதியதாக தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறபித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதே வேலையில் நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என குறிப்பிட்டு மேல்முறையீட்டு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கு மீதான விசரணையில் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பது குறித்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.