சென்னை,

மிழக  முதல்வர் பழனிசாமியுடன் நடிகர் விஷால், அபிராமி ராமநாதன் ஆகியோர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தியுள்ளதை தொடர்ந்து, திரையரங்கு கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி காரணமாக 28 சதவிகித வரி உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசும் தனது சார்பாக 30 சதவிகிதம் கேளிக்கை வரியை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக 58 சதவிகித வரி உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்து,  தமிழகம் முழுவதும் திரையரங்கு இயங்கு என்று திரையரங்கு உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் மற்றும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதனுக்கு முதல்வர் சந்திக்க அனுமதி அளித்திருந்தார்.

அதையடுத்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் நடிகர் விஷால் மற்றும் அபிராமி ராமநாதன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சினிமா டிக்கெட்டுக்கு இரட்டை வரி விதிக்கப்பட்டது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.