சென்னை:

ரசு விளம்பரங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெறுவதை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக சேவர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

எடப்பாடி தலைமையிலான அரசு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் வெளியிட்டு வருகிறது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த தடை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்எக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டபோது,  எம்.எல்.ஏ.,க்களுடன் பேரம் பேசப்பட்டதால் சட்டசபையை கலைக்க வேண்டும் என கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

மனுவில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இருப்பதாக கூறி  மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.