செப்டம்பர் 12ல் ஆறு மணி நேரம் ஃபேஸ்புக்கில் பாடும் பிரபலங்கள்.. ’ஒரு குரலாய்’ இசை மழை பொழியப்போகிறது..

Must read

ரடங்கு கோவிட் -19 சமயத்தில் பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர் களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டி. அவர்களுக்காக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) “ஒரு குரலாய்” எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி நடத்தி திரட்டி உதவ கிறது.
உலகளவில் செப்டம்பர் 12-ஆம் தேதி 2020 அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது . இதுபற்றி யுஎஸ்சிடி வெளியிட் டுள்ள அறிக்கை:
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) “ஒரு குரலாய்” எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி உலகளவில் செப்டம் பர் 12-ஆம் தேதி 2020 அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது .
சிறந்த பாடல்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் பிரபலங்களுடன் உரையாடல்களில் பார்வையாளர்கள் பங்குபெறலாம். நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் யூஎஸ்சிடி இசை நிகழ்ச்சியின் போஸ்டர் வெளியிட்டு ஆதரவை தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றி.
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து பாடகர்கள் உன்னி கிருஷ்னன், சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் , ஹரிசரண் , சைந்தவி பிரகாஷ் ஆகியோர் அறங்காவ லர்களாக பொறுப்பேற்கிறார்கள்.


எங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் , முயற்சிகளுக்கும் நீடித்த ஆதரவளித்து உறுதுனையாக நிற்கும் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு நீங்கள் தந்த பேராதரவை என்றென்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு ஃபேஸ்புக் இந்தியா தங்கள் முழு ஆதரவை தருகிறது மற்றும் இவர்களுடன் சில்வர்ட்ரீ நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டது இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு டிஜிட்டல் ஆதரவு அளிப்பது ஊடகா எனும் நிறுவனம் . நிதி திரட்ட உதவும் வலைத ளம் ‘insider.in ‘ இந்த ‘ஒரு குரலாய்’ நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Facebook – www.facebook.com/usctofficial
Instagram – www.instagram.com/usctofficial
Twitter – www.twitter.com/usctofficial
Donation link: https://bit.ly/3ly8BsW

 

More articles

Latest article