லியோ பட சக்ஸஸ் மீட் முடிந்ததும் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய் இன்று பேங்காக் புறப்பட்டார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஒரு பாடல் மற்றும் சண்டைக் காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளதை அடுத்து வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பேங்காக்கில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பேங்காக் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்தை நள்ளிரவே மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்த விஜய் பின்னர் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.