எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக இல்லை, விலகிவிட்டேன்: நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா அறிவிப்பு

Must read

சென்னை: எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் தான் பொருளாளராக இல்லை, விலகிவிட்டதாக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா கூறி உள்ளார்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதிமுக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும் களம் இறங்க உள்ளது. எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

இந் நிலையில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் முயற்சித்ததாக செய்திகள் வெளியாயின. தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்தச் செய்தியை நடிகர் விஜய் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்தக் கட்சியில் தமது ரசிகர்கள் இணைய வேண்டாம் என்றும் தெரிவித்தார். எஸ்ஏ சந்திரசேகரின் கட்சியில் அவரது மனைவியும், நடிகர் விஜயின் தாயாருமான ஷோபா சந்திரசேகர் பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இந் நிலையில் ஷோபா சந்திரசேகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் தான் பொருளாராக இல்லை எனறும் அதில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறி உள்ளார்.

More articles

Latest article