சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், அங்கு வந்த நடிகர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

சென்னை திருவான்மியூரில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்  மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும்  ராம் ரத்தன் ராய் மகன் ராகுல் ராய் ஆகியோர்  திருமண வரவேற்பு  இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த வரவேற்பு  நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண நிகழ்ச்சிக்கு நடிகர் விஜயும் வந்திருந் தார். அப்போது இருவரும் ஒருவரைக்கொருவர் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இருவரும் பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாமக, இஸ்லாமிய கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், முதல்வருடனான விஜயின் சந்திப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற தளபதி 66 பூஜை நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று படப்பிடிப்பையும் அவர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.