ஊரடங்கில் விஜய் பங்கேற்கும் பெண் இயக்குனர் திருமணம்..

Must read

கொரானா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் கடந்த நான்கு மாதங்களாக நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். ஒரு சிலர் வெளியில் தலை காட்டினாலும் பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. நடிகர் விஜய்யும் பொது நிகழ்ச்சி எதிலும் பங்கேற்காமலிருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் குடும்பம் சார்ந்த ஒரு பொது நிகழ்ச்சி யில் கலந்துகொள்ள உள்ளாராம்.


விஜய் நடித்திருக்கும் ’மாஸ்டர்’ படத்தை தயாரித்தி ருப்பவர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜய்யின் உறவினர். இவரது மகள் சினேகா பிரிட்டோ. சினேகாவுக்கும் நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷுக்கும் வரும் 23ம் தேதி சென்னை சாந்தோம் சர்ச்சில் திருமணம் நடக்க உள்ளது. சினேகா மீது பாசம் கொண்டவர் விஜய். அவரது திருமண விழாவில் விஜய் கலந்துகொள்ளவிருக் கிறார். சினேகா பிரிட்டோ கடந்த 2012ம் ஆண்டு ’சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தை டைரக்டு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

 

More articles

Latest article