சென்னை:
சென்னை சாலி கிராமத்தில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் நடிகர் சூர்யா, மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கினார்.

அவ்விழாவில் பேசிய அவர், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன் என்றும், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அனைவருக்கும் சரியான சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டகளை முயற்சி எடுத்து வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற கல்வி உதவிதொகை பெறும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது என்றும் அவர் கூறினார்.