லைகா நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடிக்க சிம்பு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் இந்தியன் -2 படத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Simbu

சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 22 வருடங்கள் கடந்த நிலையில் சங்கர் மீண்டும் இந்தியன் -2 திரைப்படத்தை தயாரிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜர் அகர்வால் நடிக்கிறார். இந்தியன் -2 படத்தை லைகா புரொடென்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. அவர் கமலுக்கு பேரனாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் -2 படத்தில் நடிக்க இருந்த சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனம் தயாரிக்கும் மற்றுமொரு படமான ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்தில் நடிக்க இருந்த சிம்பு முறையாக ஒத்துழைப்பு அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிம்பு இந்தியன் -2 படத்தில் நடிக்க வேண்டாம் என சங்கரிடம் லைகா நிறுவனம் கூறியதாகவும், அதற்கு ஷங்கரும் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் இந்தியன் -2 படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும், அவரிடம் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.