ஸ்ரீநகர்

பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

வைஷ்ணவி தேவி ஆலயம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரைசி மாவட்டம் கட்ராவில் அமைந்துள்ளது.  இன்று வைஷ்ணவி தேவி ஆலயத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சாமி தரிசனம் செய்தார்.  வரும் 21 ஆம் தேதி அன்று ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இன்று அதிகாலை நடிகர் ஷாருக்கான் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இவ்வாறு நடிகர் ஷாருக் கான் வைஷ்ணவி தேவி கோவிலில் இந்த ஆண்டில் சாமி தரிசனம் செய்வது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே பதான் மற்றும் ஜவான் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர்  வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் ஷாருக்கான் அதிகாலை வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்வதும் அவரை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.