ஜெய்ப்பூர் 

இன்று பாஜக ராஜஸ்தான் மாநில புதிய முதல்வர் பெயரை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றித் தோல்வியடைந்தது.  எனவே ராஜஸ்தன மாநில முதல்வர்  அசோக் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டு வந்தது.

இன்று நடைபெற்ற, ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பஜன்லால் சர்மாவை ராஜஸ்தான் மாநில முதல்வராகத் தேர்ந்தெடுப்பதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மாநில துணை முதல்வர்களாக தியா சிங், பிரேம் சந்த் பெய்வா ஆகியோருடன். சபாநாயகராக வசுதேவ்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவர்களுடைய பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என்று பாஜக  தெரிவித்துள்ளது.