ரஜினியின் மூன்று முகம் படத்தை ரீமேக் செய்யும் ராகவா..!

Must read

ntlrg_20161103130406076370
ராகவா லாரன்ஸ் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பு உண்டு அதை காப்பாற்றும் வகையில் இவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார். அது மட்டுமல்ல இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதும் தெரிந்த விஷயம் தான் அதனால் தான் என்னவோ இப்போது ரஜினியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான “மூன்று முகம்” திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம்.
இந்த திரைப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகின்றது. நடிகை, நடிகர்கள், தொழில்நுட்ப தேர்வு நடைப்பெற்று வருகின்றதாம். ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளாராம்.
இந்த திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதெல்லாம் வாஸ்தவம்தான் ஆனால் இதில் ரஜினி மூன்று வேடத்தில் ஒரு வேடமான அலெக்ஸ் பாண்டியன் வேடத்தை இவர் எப்படி நடிக்க போகின்றாரோ எனபதை நினைத்தால் தான் கொஞ்சம் டர்ர்ர்ர் ஆகுது. இருந்தாலும் வாழ்த்துகள் லாரன்ஸ்ஜி…

More articles

Latest article