மூன்று நாளைக்கு களைகட்டப்போகும் பிரபல நடிகரின் திருமணம்….!

Must read


தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன்.
நிதின் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி என்பவரை கரம் பிடிக்க முடிவு செய்தார். இருவீட்டாரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் சில சடங்குகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றன.
இந்நிலையில் ஐதராபாத்தில் சிம்பிளாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது.


ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் 3 நாட்களுக்கு கோலாகலமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் 26ம் தேதி காலை 8.30 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இன்று நிதின் – ஷாலினி இருவரும் தங்களது குடும்பத்தினர் முன்பு மோதிரம் மாத்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.

More articles

Latest article