வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது.
இந்தப் படத்தில் விஜய் தவிர மற்ற நடிகர் நடிகைகள் குறித்த செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது.
பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
’80 களில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு மத்தியில் தனக்கென ரசிகர்கள் குறிப்பாக ரசிகை பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டு பல்வேறு வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தவர் மோகன்.
ஏராளமான படங்களில் மைக் பிடித்து பாடகராக நடித்ததால் ‘மைக்’ என்ற அடைமொழியுடன் ‘மைக்’ மோகன் என்றே அப்போது அழைக்கப்பட்டார்.
ஹீரோ தவிர வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பதில்லை என்று தீர்மானமாக இருந்த நடிகர் மோகனை தளபதி 68 படத்திற்காக முதல்முறையாக வில்லனாக களமிறங்கியுள்ளார் வெங்கட்பிரபு.
விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்த மாதம் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியான பின்பு தளபதி 68 ல் விஜய்யுடன் இணையவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.