சென்னை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மீது நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ வி ராஜு சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார்.  அந்த பேட்டியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது அவர்கள் கேட்டு கொண்டபடி நடிகைகளை அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அழைத்து வந்ததாகக் கூறினார்.

மேலும் பிரபல நடிகை ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு ரூ..25 லட்சம் கொடுத்து அழைத்து வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த பேட்டி பல யூடியூப் சேனல்களில் பகிரப்பட்டு வைரலானது.   ஏ வி ராஜுவுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.  

இந்நிலையில் நடிகர் கருணாஸ்  அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜு மீது சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கருணாஸ் தனது புகாரில்,

”அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜு அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளார்.  எனவே காவல்துறை ஏ வி ராஜு மீதும் இதை பரப்பிய பல யூ டியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.