நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

 

இது எங்கிருந்து யாரால் ஹேக் செய்யப்படுகிறது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

இருந்தபோதும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புகார் அளிக்கும் பட்சத்தில் சில பல சரிபார்ப்புகளுக்கு பிறகு கணக்குகள் மீட்கப்படுகின்றன.

அதேவேளையில் ஹேக் செய்யப்படும் பிரபலங்கள் மட்டுமன்றி சாமானியர்களின் கணக்குகளை வைத்து பணம் பறிக்கும் வேலைகளும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.