கஞ்சா கருப்பு மீது பொய் வழக்கு..! பின்புலத்தில் யார்?

Must read

kanja-karuppu
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கஞ்சா கருப்பு தன்னை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டதாக கூறி கீழவளவு போலீஸ் நிலையத்தில் நீதி தேவன் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதுகுறித்து எக்ஸ்ளூசிவாக நடிகர் கஞ்சா கருப்பு பத்திரிகை.காம்க்கு அளித்த பிரத்யேக பேட்டி,
புகார் கொடுக்கப்பட்ட அன்று (29-09-2016) மாலைதான் நாங்கள் எங்கள் குலதெய்வ வழிபாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கையில் தெருவில் ஏதோ சத்தம் கேட்டு என்ன ஏது என்று அக்கம் பக்கத்தினரை விசாரித்தபோது, நீதி தேவன் என்பவர் 10, 15 ஆட்களுடன் வந்து பிரச்சனை செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள். அந்த சம்பவம் நடைபெறும் இடத்திற்கு கூட நாங்கள் செல்லவில்லை. ஆனால் அந்த சம்பவம் நடந்து முடிந்தபின் அன்று இரவே சில நியூஸ் சேனல்களில் கஞ்சா கருப்பும், அவரது மனைவியும் வழக்கறிஞர் நீதி தேவனை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியது. இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லாத நிலையில் இந்த மாதிரி பொய்யான புகார்களை நம்பி ஊடகங்களும் எங்களிடம் விசாரிக்காமல் இப்படி செய்தியை ஒளிப்பரப்பிவிட்டார்கள். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம்.
பின்னர் நீதி தேவன் எங்கள் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழவளவு போலீஸ் நிலையத்துக்கு நாங்கள் சென்றோம், அங்கு இது ஒரு பொய்யான புகார்தான் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என கூறி எங்களை அனுப்பிவிட்டார்கள். அதன்பின் நாங்கள் மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் நீதி தேவன் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கிறோம்.
இந்த நீதி தேவன் யார் என்பதை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அவரை பற்றி எங்களிடம் கூறியதாவது, நீதி தேவன் எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும், அதை அந்த பெண்ணிடம் ஊர் மக்கள் கேட்டுள்ளனர். இது நீதி தேவனுக்கு தெரியவர அடியாட்களை அழைத்துக் கொண்டு ஊரில் வந்து பிரச்சனை செய்துள்ளார். ஊரில் உள்ள சிலரை அடித்து ரகளையில் ஈடுபட ஊர் மக்கள் ஒன்று கூடியதும் சில வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிய பின்புதான் கீழவளவு போலீஸ் நிலையத்தில் என் பெயர் மீது புகார் கொடுத்துள்ளாராம் நீதி தேவன்.
இவ்வாறு கஞ்சா கருப்பு கூறினார்.

More articles

1 COMMENT

Latest article