டிகர் கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா புத்த மாதத்திற்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் தல அஜீத் நடித்து வரும் விவேகம் படத்திலும்  நடித்து வருகிறார். நடிகர் கமலஹாசனுக்கும், முன்னாள் மனைவி சரிகாவுக்கும் பிறந்தவர்களில் ஒருவர் நடிகர் அக்ஷரா. மூத்த மகள் நடிகை ஸ்ருதி தற்போது பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

கமலஹாசனின் இரண்டாவத மகளான அக்ஷரா தனது தாயுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடித்த படமான ஷமிதாபில் அறிமுகமாகி உள்ளார்.

பாலிவுட்டில் ஒருசில படங்களிலே நடித்து வந்த அவர் தற்போது புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

கடவுள் நம்பிக்கையின்றி  நாத்திகராக இருந்த அக்ஷரா, சமீப காலமாக புத்த மதத்தில் நம்பிக்கை கொள்ள தொடங்கினார். அதில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக  அவர் புத்த மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நடிகர் அஜீத்தின் விவேகம் படத்தில் அக்ஷரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது