கமலுக்கு செவாலியே விருது

Must read

டிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அளிக்கப்போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே 1997ம் ஆண்டு,  தமிழ்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செவாலியே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்துார் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன்,  திரைத்துறையில் கடந்த 57 ஆண்டுகளாக முத்திரை பதித்து வருகிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
0
4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான சினிமா விருதுகளை பெற்றுள்ளார்.     மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது.
நடிகராக மட்டுமின்றி,  இயக்குநர், திரை கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என  திரைத்துறையின் பல்வேறு  துறைகளிலும் தனது சிறந்த பங்களிப்பை அளித்துவருகிறார் கமல்.

More articles

1 COMMENT

Latest article