வந்தவாசி:

டிகர் ஜெகனின் கார் மோதி வந்தவாசி அருகே இளைஞர் ஒருவர் பலியானார்.

நடிகர் ஜெகன் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர். தமிழ்ப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் தர்கா அருகே உள்ள தாழம்பள்ளம் என்ற இடத்தில் அவரது கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஹுசைன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக  செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால்  அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

ஹுசைன் மினி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜெகனை வந்தவாசி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஜெகனை கைது செய்யும்படி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.