ரஜினி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு

Must read

சென்னை:
காவிரி பிரச்சனையை ஒட்டி கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன.  பேருந்து, லாரிகள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.  தமிழர் நடத்தும் சில வணிக நிறுவனங்களும் தாக்குதலுக்கு  உள்ளாகின.
இதையடுத்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.  தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட  சில கட்சியினர் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கர்நாடக பதிவெண் கொண்ட சில வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
09-rajini-actor-new-600
இதையடுத்து  கர்நாடகாவை சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த் , பிரபு தேவா , பாபி சிம்ஹா , அர்ஜுன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களின் சென்னை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More articles

Latest article