தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறைகளாக நடித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் பாலா சிங் உலநலக் குறைவால் இயற்கை எய்தினார்.

1952ம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி பிறந்த பாலாசிங், கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில், இன்று  மாலை வரை பாலாசிங்கின் இடல் வைக்கப்படுகிறது. பின் நாகர்கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

1995ம் ஆண்டு நாசர இயக்கத்தில் வழிவந்த அவதாரம் படத்தில் அறிமுகமான பாலா சிங், 2019ம் ஆண்டு மகாமுனி திரைப்படம் வரை பயணித்தார். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே போன்ற 100 படங்களுக்கு மேல் பல்வேறு  குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பை பாராட்டும் வகையில்  தமிழக அரசு இவருக்கு  கலைமாமணி  விருது கொடுத்து கவுரப்படுத்தியது.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தின் தன்மை, சாயல், மொழி போன்ற கட்டமைப்புகளில் பாலா சிங்கின் பங்கு அளப்பரியது என்று சினிமா வட்டராங்கள் தெரிவிக்கின்றன.