ம்ஜிஆரை போலவே சினிமாவில் நடித்து பின்னர் அரசியலுக்கு வந்து தெலுங்கு தேசம் என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரா வின் முன்னாள் முதல் அமைச்சர் ஆனவர் என்.டி.ராமா ராவ். இவரது வாழ்க்கை வரலாறு 10-ம் வகுப்பு தெலுங்கு பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தற்போதைய தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், என்.டி.ராமரா வின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத் தக்கது. என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை நிறுவுவது பற்றியும், பாஸ்கர்ராவ் அவரது ஆட்சி கவிழ்ப்பு நடத்திய பின்னர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற என் டி ஆர் நடத்திய போராட்டம் பற்றியும் இந்த பாட திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
பாட புத்தகத்தில் என் டி ஆர் வாழ்க்கை சேர்க்கப்பட்டதற்கு என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.