தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு நடிகர் அஜித் தகுதி! ரசிகர்கள் மகிழ்ச்சி

Must read

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு நடிகர் அஜித் தகுதி பெற்றுள்ளார். இதை அவரது  ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்த்திரையுலகில் அமராவதி என்ற படத்தின் மூலம் 1992ம் ஆண்டு  காலடி எடுத்து வைத்த நடிகர் அஜித் தற்போது 27வது ஆண்டாக திரையுலக ஜாம்பவனாக வெற்றி வலம் வருகிறார்.

பைக் ஓட்டுவதிலும், கார் ரேசில் கலந்துகொள்வதிலும் அலாதி பிரியம் கொண்ட அஜித், சமீப காலமாக டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் தயாரிப்பதிலும் தீவிரம் காட்டினார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக துப்பாக்கி பயிற்சி பெற்று வந்தார்.

அதைத்தொடர்ந்து கோவையில் நடைபெற்ற  மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக  கலந்துகொண்டார்.  10 எம். ஏர் பிஸ்டல் போட்டியில் அஜித் கலந்துகொண்டு அசத்தலாக இலக்கை நோக்கி சுட்டி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதைய்டுத்து, வரும்  டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெறும் தேசிய அளவி லான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு நடிகர் அஜித்குமார் தகுதி பெற்றார்.

அஜித்தின் துப்பாக்கி அவதாரத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

 

More articles

Latest article