பைக்கில் உலகை வலம் வந்த மரல் யாசர்லூ-வுடன் ‘தல’ அஜித் சந்திப்பு…. உலகம் சுற்ற திட்டமா ?

Must read

 

ஃபேஷன் டிசைனர், மார்க்கெட்டிங் நிபுணர், மாடல், பைக் ரைடர், பேச்சாளர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் மரல் யாசர்லூ.

ஈரானில் பிறந்த இவர் இப்போது இருப்பது புனேவில், மேற்படிப்பிற்காக இந்தியா வந்த யாசர்லூ இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இருந்தபோதும், ஈரானில் பெண்கள் மீது பாலின பாகுபாடு காட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த இவர், பைக்கிலேயே 65 நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.

ஈரானில் பெண்கள் பைக் ஓட்டுவதற்கு தடை இருந்து வரும் நிலையில், பைக் ஓட்டுவதில் பாலின பாகுபாடு காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த உலக பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், மரல் யாசர்லூ-வை சந்தித்து வாழ்த்துக்கூறியதோடு, எதிர்காலத்தில் தான் இதுபோன்ற உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

நடிகர் அஜித் – மரல் யாசர்லூ இடையேயான இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில் பதிவிட்டது முதல் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article