சென்னை:
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும், நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை முழுவதும் கடைகள் திறந்து இருப்பதால் போது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஊடங்கு நீடிக்கப்படும் என்பதால், பொருட்களை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர். மேலும் அதிகளவில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதை பயன்படுத்தி வியாபாரிகள், பொருட்களை அதிக விலை விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முழுவதும் கடைகள் திறந்திருக்கும்; அச்சத்தில் பொருட்களை வாங்கிக்குவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வியாபாரிகள், அதிக விலைக்கு பொருட்கள் விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
[youtube-feed feed=1]