சென்னை:
தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி சுற்றக்கூடாது என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி சுற்றக்கூடாது என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தளர்வுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குகிறோம் என்ற பெயரில் நகர் முழுவதும் தேவையின்றி சுற்றக்கூடாது; அந்தந்த பகுதிகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.