டில்லி:

ந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 545. ஆனால், இவர்களில் 543 பேர் மட்டுமே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 2 பேர் நியமன உறுப்பினர்கள்.

இப்படியிருக்கையில், சமீபத்தில் வெளியாகி ஏபிபி செய்தி சேனல் வெளியிட்ட செய்தியில், நாடாளுமன்ற மொத்த தொகுதிகள் என 564 என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று, ஏபிபி தொலைக்காட்சி நிறுவனமும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி  உள்ளனர். அதன் முடிவுகள் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏபிபி டிவி நிறுவனம் பரபரப்பு செய்தி வெளியிட்டது.

அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 274 இடங்கள்  கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது. இது கடந்த முறையயை விட குறைவு என்றும், தற்போது ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியின் தீவிர பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவித்தது. இரு அணிகளும் சொற்ப வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வியை நிர்மாணிக்கும் என்றும் தெரிவித்த நிலையில், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து 543க்கு பதிலாக 564 என தவறாக வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய விட 121 தொகுதிகள் அதிகம் எப்படி வந்தது என பலர் கேள்வி எழுப்பினர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..ஏபிபி செய்தி சேனலையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.