புதுடெல்லி:
த்திய அரசின் பழைய வாகன ஒழிப்பு கொள்கைப்படி தமிழகத்தில் சுமார் 33 லட்சம் வாகனங்கள் அழிக்கப்படும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுசூழலை மேம்படுத்தும் நோக்கில் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. இதன் படி 20 ஆண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருக்கும் தனிநபர் உபயோக வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் பொது உபயோக வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட உள்ளன. இதில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுமார் 70 லட்சம் வாகனங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்ததாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 56.5 லட்சம் பழைய வாகனங்களும், தலைநகர் டெல்லியில் 50 லட்சம் பழைய வாகனங்களும், கேரளாவில் 34.5 லட்சம் வாகனங்களும், தமிழகத்தில் 33 லட்சம் பழைய வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளதால் இவை புழக்கத்தில் இருந்து அளிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களின் பயன்பாட்டை கைவிட வேண்டும் என்பதற்காக புதிய வரி விதிப்பை அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.