பிக் பாஸ் 5 : முதல் நாமினேஷனில் கிழிந்த முகமூடிகள்….!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் கேப்டன் தேர்வுக்கான போட்டியில் தாமரைச்செல்வி வெற்றி பெற்று தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற நாமினேஷன் நடைபெற்றது. தாமரைச்செல்வி மற்றும் பாவனியைத் தவிர மற்ற 15 போட்டியாளர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தாமரை செல்வி தலைவர் ஆனது எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் சின்ன பொண்ணுக்கு அது பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. சின்ன பொண்ணு பிரியங்காவிடம் விட்டு கொடுத்ததை பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். தாமரை பேச்சு, நடைமுறை மாறியதால் சண்டை வர வேண்டாம்ன்னு விட்டு கொடுத்ததாக கூறுகிறார். “நான் விட்டு கொடுத்ததால் தான் நீ ஜெயித்த” என்று தாமரையை அசிங்கப்படுத்த அவரின் முகம் மாறுகிறது. உடனே தாமரை உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா சாரி என்கிறார்.

முதல் ப்ரோமோ : யூ ட்யூபர் அபிஷேக் ராஜா மற்ற போட்டியாளர் ரிவ்யூ செய்கிறார். அதில் நாதியா சங்கை இந்த சீசனின் வனிதா என அவர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில் : ப்ரியங்கா , நிரூபி மாத்ருஜம் அபிஷேக் க்ரூபிஸம் பற்றி பேசி சிரிக்கின்றனர் .

மூன்றாவது ப்ரோமோவில் அபிஷேக் வீட்டிலுள்ள ஹவுஸ்மேட்களுக்கு அடைமொழி வைக்கிறார். “அசால்ட் அக்ஷரா”, “வவ்வால் வருண்”, “நெருப்பு நிரூப்”, “இம்சை இசை” என ஒவ்வொருவருக்கும் அடைமொழி வைக்கும் கலகலப்பான ப்ரோமோ வெளியானது.

More articles

Latest article